இணையத்தில் பிரவுசிங் செய்யும் போது சில பிரவுசர்களில் தானாக ஆடியோ இயங்க துவங்கும் போது பலருக்கும் தொந்தரவாக இருக்கும். நல்லபடியாக பெரும்பாலான நவீன பிரவுசர்களில் டேப்களை தனித்தனியாக மியூட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
ஏற்கனவே மற்றொரு சாதனத்தில் ஆடியோ அல்லது வீடியோ எதையேனும் பார்க்கும் போது இந்த அம்சம் பயன் தருகிறது. இதுபோன்று பின்னணியில் தொந்தரவு செய்யும் ஆடியோவை தனித்தனியாக மியூட் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் க்ரோம்:
கூகுள் க்ரோம் பிரவுசரில் ஆடியோ பிளேபேக் அம்சம் ஸ்பீக்கர் ஐகான் கொண்டு தெரியப்படுத்தப்படுகிறது.இதில் ஆடியோவை மியூட் செய்ய டேபில் ரைட் க்ளிக் செய்து மியூட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். மாறாக நேரடியாக ஸ்பீக்கர் ஐகானை க்ளிக் செய்தும் மியூட் செய்யலாம்.
ஆப்பிள் சஃபாரி:
சஃபாரியில்மியூட்செய்ய அட்ரெஸ்பாரில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை க்ளிக் செய்து ஆன், ஆஃப் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
மொசில்லா பயர்பாக்ஸ்:
கூகுள்க்ரோம் போன்று பயனர்கள் ரைட் க்ளிக் செய்து ஸ்பீக்கர் ஐகானை க்ளிக் செய்து மியூட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
மைக்ரோசாஃப்ட் எட்ஜ்:
மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரில்ஆடியோ இயங்கும் டேபில் ஸ்பீக்கர் ஐகான் தெரியும். எட்ஜ் பிரவுசரில் ஆடியோவை மியூட்செய்ய விண்டோஸ்டாஸ்க் பாரில்ரைட்க்ளிக் செய்து மியூட் செய்யலாம்.