உலகில் ஹார்டு டிஸ்க் டிரைவ்கள் (HDD) பயன்பாட்டுக்கு வந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போதைய கம்ப்யூட்டர்களில் சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SDD) அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவில் அதிக டேட்டா ஸ்டோரேஜ் விரும்புவோர் ஹார்டு டிஸ்க் டிரைவ்களை தேர்வு செய்வர்.
சிஸ்டத்துடன் உங்களது பயன்பாடுஃபைல் கள் எத்தனை வேகத்தில் பரிமாற்றப்படுகின்றன. மேலும் எத்தனைஃபைல்களை ஒரேசமயத்தில் பரிமாற்றம்செய்ய முடியும் என்பதைவைத்தே முடிவு செய்ய முடியும்.
உங்களது ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், சாலிட்ஸ்டேட் டிரைவ்கள் மற்றும் இதர ஸ்டோரேஜ்சார்ந்தவிவரங்கள் அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
வழிமுறைகள்
1) விண்டோஸ் 10 சிஸ்டம் விவரங்கள்.
2) மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முந்தைய வெர்ஷன்கள்.
3) ஐ.பி.எம். பயனர்கள்.
4) ஆர்.பி.எம். வேகத்தை நிர்ணயிப்பது.
5) மூன்றாம் தரப்பு பயன்பாடுகள்.
6) மற்ற டிஸ்க் பயன்பாடுகள்.
7) மற்ற வழிமுறைகள்.
விண்டோஸ் 10 சிஸ்டம் விவரங்கள்:
விண்டோஸ் 10 சிஸ்டம் இன்ஃபர்மேஷ் யூடிலிட்டி (System Information Utility) மூலம் உங்களது ஹார்டுவேர் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
ஸ்டார்ட் மெனு செல்லவும்:
மெனுவின் W, ஆப்ஷனில் உள்ள Windows AdministrativeTools அம்சத்தைக்ளிக் செய்யவும். இனி சிஸ்டம் இன்ஃபர்மேஷன் (System Information) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். ரன் பாக்ஸ் பயன்படுத்தியும் சிஸ்டம் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
கீபோர்டில் Win+Rபட்டனை க்ளிக் செய்யவும்:
இனி ரன் பாக்ஸ் இல் msinfo32 என டைப் செய்யவும்.
இறுதியில் OK, அல்லது Enterபட்டனை க்ளிக் செய்யவும். சிஸ்டம் இன்ஃபர்மேஷன் விண்டோவின் இடது புறத்தில் ஹார்டுவேர் பிரிவுகள் காணப்படும். இங்கு காம்போனெ ண்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக்செய்துஸ்டோரேஜ் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து டிரைவ், டிஸ்க் அல்லது நீங்கள் பார்க்க விரும்பும் பிரிவை க்ளிக் செய்யவும்.
முந்தைய விண்டோஸ் வெர்ஷன்கள்:
நீங்கள் முந்தைய விண்டோஸ் வெர்ஷனை பயன்படுத்தினால் கீழேவரும் வழிமுறைகளை பின்பற்றலாம். ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து ப்ரோகிராம்ஸ் "Programs" ஃபோல் டரை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து அக்சஸரீஸ்"Accessories"ஆப்ஷ னில் சிஸ்டம் இன்ஃபர்மேஷன் "System Information"அல்லது சிஸ்டம்டூல்ஸ் "System Tools"ஃபோல்டரைக்ளிக்செய்ய வேண்டும்.
இனி சிஸ்டம் இன்ஃபர்மேஷன் "System Information"ஃபைலை திறக்க வேண்டும்.
சிஸ்டம் இன்ஃபர்மேஷன் விண்டோவில் உள்ள + ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
அடுத்து ஸ்டோரேஜ் "Storage" ஆப்ஷன் அருகில் இருக்கும் "+" பட்டனை க்ளிக் செய்து டிரைவ்ஸ் "Drives" பட்டனை க்ளிக் செய்யவும். விண்டோவின் வலது புறத்தில் ஹார்டு டிரைவ் கொள்ளளவு சீரியல் நம்பர் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.
ஐ.பி.எம். பயனர்கள்:
ஐ.பி.எம். பயனர்கள் ஹார்டு டிரைவ் சார்ந்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள கம்ப்யூட்டரின் CMOS செட்டப் செல்ல வேண்டும். இதில் ஹார்டு டிரைவின் சீரியல் நம்பர்,மாடல் நம்பர், சிலிண்டர்கள், ஹெட்கள், செக்டர்கள் மற்றும் ஹார்டு டிரைவ் அளவு உள்ளிட்டவற்றை பார்க்க முடியும். ஹார்டு டிரைவ் வேகம் அல்லது ஆர்.பி.எம்.
ஹார்டு டிரைவின் ஆர்.பி.எம். அறிந்து கொள்ள உற்பத்தியாளர் மற்றும் ஹார்டு டிரைவ் மாடலை பார்க்க வேண்டும். பின் உற்பத்தியாளரின் வலைத்தள பக்கத்தில் ஹார்டு டிரைவின் ஆர்.பி.எம்.விவரங்களை பார்க்கலாம்.
சில ஹார்டு டிரைவ் உற்பத்தியாளர்கள் ஹார்டு டிரைவ் ஆர்.பி.எம். விவரங்களை பட்டியலிடுகின்றன. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிரைவை வெளியே எடுத்து அதில் உள்ள ஸ்டிக்கரில் ஆர்.பி.எம். பட்டியலிடப் பட்டிருப்பதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மூன்றாம் தரப்பு பயன்பாடுகள்:
கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டு டிரைவ் விவரங்களை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டு இருக்கும் இலவச மென்பொருள்களை பயன்படுத்தியும் ஹார்டு டிரைவ் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மற்ற டிஸ்க் பயன்பாடுகள்:
மற்ற டிஸ்க் பயன்பாடுகள்: சில டிஸ்க் பயன்பாடுகள் ஹார்டு டிரைவ் திறனை பயனருக்கு வழங்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டிருக்கும். இவை பயனர் எதிர்பார்க்கும் கூடுதல் விவரங்களை வழங்கும்.
மற்ற வழிமுறைகள்:
ஹார்டு டிஸ்க்வாங்கும் போதோ அல்லது கம்ப்யூட்டரில் இருந்து வெளியே எடுத்தோ அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரைப்பார்த்து அதன் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.